Rajinikanth praises mahaan film

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளனர்.சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெவ்வேறு காலகட்டங்களில் கதைகள் நகருவதுபோல அமைக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று(10.2.2022)அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜைபோனில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறந்த படம்... சிறந்த நடிப்பு... புத்திசாலித்தனமான திரைக்கதை என தலைவர் என்னை போனில் அழைத்து பாராட்டினார். அவருக்கு இந்த படம் பிடித்திருக்கிறது.உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா...உங்களின் பாராட்டால் நாங்கள்உற்சாகம் அடைந்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.