Advertisment

"சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்" - ரஜினிகாந்த் பாராட்டு

Advertisment

rajinikanth praised jigarthanda 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

படத்தை பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷங்கர், அனிருத், நெல்சன் திலீப்குமார், அருண்ராஜா காமராஜ், அறிவழகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் இருக்கும் அறிக்கையில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். 'லாரன்ஸால்' இப்படியும் நடிக்க முடியுமா.? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது, எஸ்.ஜே சூர்யா, இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார். திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டிற்குரியது. 'திலீப் சுப்பராயனின்' சண்டை காட்சிகள் அபாரம். 'சந்தோஷ் நாராயணன்' வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர்.

இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். கார்த்திக் சுப்புராஜை நினைத்து பெருமையாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிகர்தண்டா படத்தின் வில்லன் கதாபாத்திரமான 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தை தன்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor raghava lawrence Actor Rajinikanth karthik subbaraj
இதையும் படியுங்கள்
Subscribe