Advertisment

"உலகத்தில் இதுவரை யாருமே எடுத்தது கிடையாது" - ரஜினிகாந்த் பாராட்டு

rajinikanth praised iravin nizhal film

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படத்தில் பார்த்திபன் 'நந்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பலரும் பார்த்திபனுக்கும், இரவின் நிழல் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த், "பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான கலை முயற்சி செய்யணும் என்று துடிக்கிற கலைஞன். நான் லீனியர் சிங்கிள் ஷாட், உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்ததுகிடையாது. நிச்சயமாக இந்த படம் நல்லா ஓடும்" என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ACTOR PARTHIBAN Actor Rajinikanth iravin nizhal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe