Advertisment

நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

Rajinikanth pay homage Meena husband Vidyasagar

Advertisment

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

அண்மையில் மீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றிலிருந்து மீண்ட வித்யாசாகருக்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளது.இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பொருந்தக்கூடிய நுரையீரல் கிடைக்காததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் இருந்து நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். இவரின்மறைவுக்கு திரைபிரபலங்கள்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்நடிகைமீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்குநேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இதனிடையே நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினர் மற்றும் நடிகை ரம்பா உள்ளிட்ட பல பிரபலங்கள் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

vijayakumar Actor Rajinikanth meena
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe