Advertisment

ரஜினியின் புதிய ப்ளான்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

rajinikanth next two signed with lyca productions

Advertisment

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாககூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமானலைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில்புதிய படம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் பணிகளேஇன்னும்முடியாத நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளதுரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொருபடம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரைவெளிவரவில்லை. கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூலை வாரி குவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

lyca ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe