பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி எந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்நிலையில் ரஜினியின் 166 வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த செய்தியை முருகதாஸே ஒரு மேடையில் உறுதி செய்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளியானபோது இந்த படத்திற்கு ‘நாற்காலி’ என முருகதாஸ் பெயர் வைத்திருக்கிறார் என்று பேசப்பட்டது. இதை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் முருகதாஸ். தற்போது வரை படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது. ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகே நடைபெறும் என்று சொல்லிவந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.