Rajinikanth meets fans

Advertisment

ரஜினிகாந்த்தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே 'ரஜினிகாந்த்சமூக அறக்கட்டளை' சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்வில் பேசிய சத்தியநாராயணராவ், " இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்த புனிதமான அறக்கட்டளை இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ரசிகர்களை சந்திப்பார். இந்த ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையிலேயே சந்தித்தார்" என்று கூறினார்.