இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அடுத்ததாககிராஃபிக் நாவலில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாக தோன்றியுள்ளார்.
விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை, தோனி தனது சமூகவலைத்தளபக்கத்தில் வெளியிட்டிருந்தார்.'பாகுபலி' போன்ற சரித்திர படநாயகர்கள் கெட்டப்பில் தோனி தோன்றியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்நிலையில் தோனியின் 'அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவல் புத்தகத்தைமுதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த புத்தக வெளியீட்டு ட்ரைலரையும்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.