rajinikanth

ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான 'தலைவி' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். நடிகை கங்கனா ரணாவத்தின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டதுடன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை அலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்காக சிறப்பு காட்சியைப் படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதில்படம் பார்த்த ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டுவந்துள்ள விதத்தைத் தான் மிகவும் ரசித்தாகக் கூறி இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment