/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/264_15.jpg)
சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களைபகிர்ந்தார்.
அதன் ஒரு பகுதியாக,“25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு.அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க.
என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)