தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நேற்றும் இன்றும் நடக்கிறது. நேற்றைய நிகழ்வின் ஹைலைட்டாக ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க இளையராஜா 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை பாடி ரசிகர்களை பெருமகிழ்ச்சிக்கு ஆளாக்கினார். இரண்டாம் நாளான இன்று நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம்,சூர்யா, தனுஷ்என உச்ச நட்சத்திரங்கள் பலரும் வருகை தந்துள்ளனர். இதனால் இளையராஜா மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறார்.