Advertisment

இயக்குநர் நெல்சனுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்?

rajinikanth joining director nelson dilipkumar

இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில், கடந்த ஆண்டு வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9e1a6829-f6df-4e02-a90c-acca2c0968de" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_3.jpg" />

Advertisment

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின்அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாககூறப்படுகிறது. 'அண்ணாத்த' படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்தின்அடுத்த படத்தை இயக்குநர்கள் பாண்டியராஜ், சிறுத்தை சிவா, பிரபல பாலிவுட் இயக்குநர்பால்கி ஆகிய மூவரில்ஒருவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் 169 வது படத்தை நெல்சன் திலீப்குமார்இயக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Beast ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe