rajinikanth joining bollywood director balki new movie

இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில், தீபாவளி அன்று வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் இயக்குநர்பால்கி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனுஷ், அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'மிஷின்மங்கள்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்த இயக்குநர்பால்கி ஒரு கதையை கூறியுள்ளதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment