ஜெயலலிதா பிறந்தநாள்; மனம் திறந்த ரஜினிகாந்த் 

rajinikanth jayalalitha birthday  wishes viral video

தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசும்போது, "ஜெயலலிதாவின்75 பிறந்த நாளில் அவர் இப்போது நம்மிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைவூட்டிக் கொள்கிறேன். ஜெயலலிதாவை போன்ற இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம்,அறிவு, துணிச்சல், ஆளுமை கொண்டவர். எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் என்று பெயர் உள்ளது எல்லோருக்கும்தெரியும். நடிகனாக இருந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து அவர் மறைவுக்கு பிறகு கட்சியில்பிளவு ஏற்பட்டபோது, கட்சியில் மிகப்பெரிய அனுபவமான, திறமையானதலைவர்கள் எல்லாம் இருக்கும் போது தனி பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக இணைத்து கட்சியை இன்னும் பெரிதாக மாற்றி பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள்.

இந்தியாவில் உள்ள எல்லாஅரசியல் தலைவர்களும்ஜெயலலிதாவை மதித்தார்கள். அவரின் திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு கால கட்டத்தில் எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு எதிராக பேச வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்கு அப்புறம் என் மகள் திருமணத்திற்கு அழைத்தபோது அதனை எல்லாம் மறந்து திருமணத்திற்கு வந்து திருமணத்தை நடத்தி கொடுத்தார்கள் அவ்வளவுபெரிய கருணை உள்ளம்'" என்று அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe