Advertisment

'இது டைகரின் கட்டளை' - ஜெயிலர் ரஜினி

rajinikanth jailer second single update

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர்.அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா', யூட்யூபில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 'ஹுக்கும்' (Hukum) என்ற தலைப்பில் வருகிற 17ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான ஒரு சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதை ட்விட்டரில் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் 'இது டைகரின் கட்டளை' எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வாசகத்தை ரஜினி அந்த வீடியோவில் இந்தியில் பேசுகிறார்.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe