மிரட்ட வரும் 'ஜெயிலர்'; வெளியான புதிய தகவல்

rajinikanth jailer movie shoot begins next month

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்தஅறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதால்படத்தின் படப்பிடிப்புதுவங்காமல் இருக்க காரணம்என்று கூறப்படுகிறது. தன்னை நிரூபித்தாக வேண்டும்என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான செட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஜெயிலில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு பிரம்மாண்ட ஜெயில் செட் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe