சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர்ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் எனப்படக்குழு தெரிவித்துள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் தெரிவித்த படக்குழு அதில் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் கெட்டப்புகளை காண்பித்துள்ளது. மோகன்லால் ரெட்ரோ லுக்கில் கூலிங் க்ளாஸுடன் வருகிறார்.
சிவராஜ் குமார் வேஷ்டி சட்டையில் வருகிறார். எல்லா கதாபாத்திரம் வந்த பிறகு இறுதியாக ரஜினி என்ட்ரி கொடுக்கிறார். இதற்கு முன்பு வெளியான முன்னோட்ட வீடியோவில் இருந்த அதே கெட்டப்பில் காரில் இருந்து ஸ்டைலாக இறங்குகிறார். பெரிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.