Advertisment

'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு

rajinikanth invited to stalin autobiography book launch

Advertisment

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையை வெளியீட்டு விழாவில், இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் (பாகம் 1) வெளியீட்டு விழா, வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர். பாலு முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,'உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, புத்தக வெளியிட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, வரவேற்புரை ஆற்ற, முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்புரை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் முதல்வரின்'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டுவிழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த்திற்கு பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இவ்விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமகநிறுவனம் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ACTORS RAJINIKANTH cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe