Advertisment

வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு - அபுதாபிக்கு சென்ற ரஜினிகாந்த் 

rajinikanth goes abu dhabi for taking rest

Advertisment

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கூலி எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூலிபடப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக வெளிநாட்டில் ஓய்வெடுக்கிறார் ரஜினிகாந்த். அபுதாபிக்கு சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு பின்பு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த அவரது ரசிகர்கள் அவரைக் கண்டதும் உற்சாகமடைந்தனர்.

abu dhabi Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe