/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/178_15.jpg)
திரைத்துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கவுள்ள ரஜினி தனது ரசிகர் மன்றம் சார்பாக பல நலத்திட்டஉதவிகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியை வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சோளிங்கர் ரவி நடத்துகிறார்.
சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் வருகிற 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ரஜினிக்கு பாராட்டு தெரிவிப்பது மட்டுமல்லாமல் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான தலைப்பை ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தலைப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், "இந்த நிகழ்ச்சியின் தலைப்பு, அவருக்கே உண்டான தலைப்பு. அவர் வாழ்க்கையில் ஒரு சிறிய உதவி செய்து வந்த நபர் நான். அவர் என் குரு" எனப் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)