Advertisment

ரஜினிக்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்கியவர் மரணம்!

rajinikanth fan muthumani passed away

முதல் முதலில் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த ஏ.பி முத்துமணி(63) இன்று(9.3.2022) காலமானார்.இந்திய சினிமாவின்உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் தனது நடிப்பாலும் தனக்கே உரித்தான ஸ்டைலாலும்கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். 45 ஆண்டிற்கும்மேலான இவரின்சினிமா வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்த ரஜினிகாந்துக்கு உலகளவின் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இருப்பினும் முதல் முதலில் நடிகர் ரஜினிகாந்துக்கு முதல் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையை சேர்ந்த ஏ.பி முத்துமணி. இவர்மதுரை மாவட்ட ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். மேலும் இவரின் திருமணம் ரஜினிகாந்தின்முன்னிலையில் அவரின்இல்லத்தில் நடந்ததாகசொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ஏ.பி முத்துமணி(63) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவுகாரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.பி முத்துமணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின்மறைவுக்கு ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அகிலஇந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாகவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

rajini fan's rajini fan Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe