Advertisment

இயக்குனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ரஜினிகாந்த்!

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப்பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே ஃபெப்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கரோனா அச்சுறுத்தலால் வேலையின்றி கஷ்டப்படும் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...

Advertisment

chh

''அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ரஜினி சார் அவர்களுக்கு,

இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழிலின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் உங்கள் கலை குடும்பத்தின் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு, தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரணபொருட்கள் கிடைக்கப் பெற்றோம். குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலை குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை, போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும், குடும்பம் நீடூழி வாழட்டும்'' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe