Rajinikanth condoles the lost of actor Srinivasan
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20-12-25) காலை காலமானார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரஜினிகாந்த் மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், “என்னுடைய நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். திரைப்பட கல்லூரியில் அவர் என்னுடன் படித்தவர். மிகச்சிறந்த நடிகர், நல்ல மனிதர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று கண்ணீர் குரலில் பேசினார்.
Follow Us