Rajinikanth  - Chandrababu Naidu meeting

Advertisment

ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீதம் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று ஆந்திரா முன்னாள்முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்திருக்கிறார். சந்திப்பு பற்றிய தன்னுடைய டிவிட்டர் பதிவில்“நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அருமை நண்பர்மதிப்பிற்குரிய சந்திரபாபு நாயுடுகாருவை சந்தித்து மறக்க முடியாத நேரத்தைக் கழித்தேன். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் மற்றும் அவரது அரசியல் வாழ்வில் பெரும் வெற்றியடையவும் வாழ்த்தினேன்” என்று கூறியுள்ளார்.