/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/118_32.jpg)
தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ்த்திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு நபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் பவேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில், ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் பாட்ஷா பட பாணியில் கைகளை கம்பத்தில் கட்டிக்கொண்டு வாயால் ரஜினிகாந்த்தின் ஓவியத்தை வரைந்துள்ளார். நாமக்கல்லில் ஆதரவற்றோர்களுக்கு ரஜினி ரசிகர்கள் உணவளித்துள்ளனர். புதுச்சேரியில் மணக்குள விநாயகர் தேரை இழுத்து ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மதுரையில் ஒரு ரசிகர் அவரது வீட்டில் ரஜினிக்கு சிலை வைத்துள்ள நிலையில் அதற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.
இதனிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு வாழ்த்து கூற ரசிகர்கள் குவிந்துள்ளனர். வீட்டின் 10 அடிக்கு முன்பாகவே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ரஜினியின் உதவியாளர் சாக்லேட்டுகள் வழங்கினார். ரஜினியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)