Advertisment

முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா - சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் ரஜினிகாந்த்

Rajinikanth to attend NTR’s centenary celebrations

Advertisment

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் அடுத்த மாதம் 28 ஆம் தேதி (28.05.2023) வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சில படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடத்தில் இவர் நடித்த ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), கர்ணன் (தமிழ், 1964) மற்றும் தான வீர சூர கர்ணன் (1977) உட்பட 17க்கும் மேற்பட்ட படங்கள் இவரை தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுவந்த இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். 1984 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அவருக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்து தமிழக மக்களிடமும் பிரபலமானார்.

இந்த நிலையில் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாளை விஜயவாடாவில் வருகிற 28 ஆம் தேதி (28.04.2023) பிரம்மாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ளனர். இந்த விழா குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா. அதில் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth nandamuri balakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe