rajinikanth appreciation pa.ranjith Natchathiram Nagargiradhu

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமூகத்தில் காதலின் பரிணாமங்களை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் ரஜினிகாந்த் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இதனை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரஜினிகாந்த் பாராட்டியதை பதிவாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை போன்றவற்றில் உங்களது சிறந்த படைப்பு இது” என்று ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்.

Advertisment