Published on 20/10/2018 | Edited on 20/10/2018






ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். மேலும் 15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்திருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நன்றிகள். அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என்று ரஜினி ட்விட்டரில் நேற்று பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.