rajinikanth and shahrukh khan attending Nayanthara VigneshShivan Wedding

Advertisment

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள்தொடர்ந்துகேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில்மிகவும் பிரமாண்டமாக திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் காலை 10.20 மணிக்கு காதலன் விக்னேஷ் சிவனை நயன்தாரா கரம் பிடித்தார்.

இத்திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், சரத்குமார், கே.எஸ் ரவிக்குமார், அட்லீ, எஸ்,ஜே சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இவர்களுடன் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் தங்களதுகுடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், உள்ளிட்டபல முன்னணி நடிகர்களும்பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.