Advertisment

"எதிர்ப்போர் கருத்துக்கு இடமளித்து..." - முதல்வர் குறித்து கமல் கருத்து

rajinikanth and kamalhaasan wishes cm stalin

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள்என பலரும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,"மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,"இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth cm stalin kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe