Advertisment

'ரஜினிகாந்த், கமல்ஹாசன்' - பொன்னியின் செல்வன் படக்குழுவின் மெகா ப்ளான்

Rajinikanth and Kamal Haasan to attend ponniyin selvan audio launch - information released

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இருவருக்கும் படக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

actor kamal hassan Actor Rajinikanth manirathnam ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe