மீண்டும் போட்டிப்போடும் ரஜினி, அஜித்?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் போனி கபூர்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் என்று முன்னரே அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

rajini with ajith

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நேர்கொண்ட பார்வை இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். அது வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. தற்போது, அடுத்த படத்துக்காக அஜித்திடம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் எச்.வினோத் என்றும், அந்தப் படத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அடுத்த வருடம் ஜனவரி பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ படம் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட தொடக்கத்திலேயே பேட்ட, விஸ்வாசம் என இவ்விரு ஹீரோக்களும் போட்டிப்போட்டு இருவரும் ஹிட் கொடுத்தார்கள். இதை போல அடுத்த வருடமும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Rajinikanth ajithkumar
இதையும் படியுங்கள்
Subscribe