Advertisment

அமிதாப்பின் அந்த அட்வைஸை மட்டும் ஃபாலோ பண்ணமாட்டேன்! - ரஜினி சொன்ன சீக்ரட்

ரஜினிகாந்த் - முருகதாஸ் கூட்டணியில் உருவான ‘தர்பார்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியபோது....

Advertisment

rajini

''நான் முன்பு சொன்னதுபோல் எனக்கு எப்போதும் ஹிந்தி நடிகர்களில் அமிதாப்பச்சனை தான் பிடிக்கும். திரையிலும், திரைக்கு பின்னாலும் அமிதாப்பச்சன்தான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஒரு முறை நான் அவருடன் பேசும்போது எனக்கு மூன்று அறிவுரைகள் வழங்கினார். தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும், மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு பிசியாக இருக்கவேண்டும், அரசியலில் நுழையாதே என்று அறிவுரை வழங்கினார். இதில் முதல் இரண்டு அறிவுரைகளை கடைபிடிக்கிறேன். ஆனால் மூன்றாவது அறிவுரையை சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக என்னால் பின்பற்ற முடியவில்லை. இதுவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களும் நடித்து விட்டேன். இருப்பினும் எனக்கு நடிக்க விரும்புகிற ஏதாவது ஒரு கதாபாத்திரம் உண்டென்றால், அது திருநங்கை கதாபாத்திரம்தான்'' என்றார்.

Advertisment

darbar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe