rajinikanth aishwarya rajinikantha visit Tirupati temple

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோ கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு திருப்பதிக்கு வந்த இருவரும் திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி, இன்று (15.12.2022) அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு உள்ளவர்கள் ரஜினிகாந்துக்கு சால்வை அணிவித்து வரவேற்றிருந்தனர்.

Advertisment

சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “6 வருடங்களுக்குப் பிறகு வருகிறேன். ஒவ்வொரு முறையும் தரிசனம் பண்ணும்போதும் கிடைக்கும் அருள்;அது ஒரு சொல்லமுடியாத உணர்வு”என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றது தொடர்பான கேள்விக்கு, “உதயநிதிக்கு வாழ்த்துசொல்லியிருக்கிறேன்”எனப் பதிலளித்தார்.