"உங்கள் குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்" -ரஜினிகாந்த் இரங்கல்!

judtjdtjd

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி. உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்..

"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் பாலு சார்... நீங்கள் பல ஆண்டுகளாக என் குரலாக இருந்தீர்கள்... உங்கள் குரலும் உங்கள் நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்... நான் உங்களை உண்மையிலேயே மிஸ் செய்கிறேன்..." என வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

Actor Rajinikanth spb
இதையும் படியுங்கள்
Subscribe