rajinikanth about retro movie

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரு வாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ.104 கோடி வசூலித்துள்ளது. இதனிடையே இப்படத்திற்கு ரஜினி பாராட்டியுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் பதிவிட்டிருப்பதாவது, “தலைவர் ரெட்ரோ படத்தை பார்த்தார். அவருக்கு படம் பிடித்திருந்தது. அவர் கூறிய வார்த்தைகள், ‘ஒட்டு மொத்த டீமிடமிருந்து என்ன ஒரு உழைப்பு... சூர்யா நடிப்பு சூப்பர், படத்தின் கடைசி 40 நிமிட காட்சி அருமை, சிரிப்பு சம்பந்தமான காட்சிகள் சிறப்பு... காட் ப்ளஸ்’ என்று சொன்னார். நான் இப்போது பறந்து கொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment