Advertisment

"அதிர்ச்சியளிக்கிறது" - மாரிமுத்து மறைவு குறித்து ரஜினி

rajinikanth about marimuthu passed away

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் நடிகரோடு துணையாக வலம் வருவார். சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ஒன்றில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் சென்றடைந்தார். குறிப்பாக “இந்தாம்மா... ஏய்...” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

Advertisment

இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல்டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து (58) திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாரிமுத்துவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கடித்துள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாரிமுத்துவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் பக்கத்தில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, நெல்சன், கவின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

passed away actor marimuthu Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe