Skip to main content

“இந்தியா இதில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது” - ரஜினிகாந்த்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

rajinikanth about football

 

அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் சென்னையில் கால்பந்து அகாடமி தொடங்க உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் கால்பந்து அகாடமி வருவது மிகவும் சந்தோஷமான விஷயம். ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. இது இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் கிரிக்கெட் வந்த பிறகு, கிரிக்கெட் ஆதிக்கம் செய்தது. 

 

இப்போது கொல்கத்தா, கேரளாவில் கால்பந்து அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. மேலும் கால்பந்து குறித்த விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. கடைசியாக நடந்த உலககோப்பை போட்டிகளை பார்க்காதவர்கள் கிடையாது. கால்பந்து  நல்ல திறமையுடன் ஆடக்கூடிய ஒரு வீர விளையாட்டு. சின்ன நாடுகளும் கூட இந்த விளையாட்டை விளையாடி உலகம் முழுவதும் தெரிகின்றன. ஆனால் இந்தியா இதில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இதனால் யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத்தக்கது. சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு ஆகியோரை இந்த அகாடமி கொடுக்கணும்'' என்றார்.

 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்