rajinikanth about ayodhya ramar temple

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவினார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அந்த வகையில், ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

ரஜினி பேசுகையில், “இது ஒரு வரலாற்று நிகழ்வு. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்திக்கு வருவேன்” என்றார். ராம் சரண் கூறுகையில், “இந்தியாவில் பிறந்து இதைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு வரமாக இருக்கிறது” என்றார். சிரஞ்சீவி பேசுகையில், “இது ஒரு அற்புதமான அனுபவம். அனைத்து இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நாள்” என்றார்.