ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_83.jpg)
இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில் வருகிற 18-ந் தேதி மட்டும் ரஜினிகாந்த் சென்னை வந்து தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஜூலை மாதம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பிறகு படப்பிடிப்பு நிறைவடைகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் ரகசியமாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்தனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் யாரோ படம் பிடித்து இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)