rajini wishes vijay political party

Advertisment

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகரும் தமிழக வெற்றி கழகத்தை தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ என குறிப்பிட்டுருந்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும்தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திற்காக புதுச்சேரி சென்றுள்ளார். அவரைப் பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஏராளமான ரசிகர்களை சந்தித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ரஜினி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்திற்காக ஆந்திரா சென்ற ரஜினி தற்போது படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.