rajini wishes pm narendra modi regards his birthday

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (17.09.2024) தனது 74வது பிறந்தநாள் காணும் நிலையில் பா.ஜ.க-வினர் அதை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே மோடிக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் திரெளபதி, நடிகர் மற்றும் த.வெ.க.தலைவர் விஜய், நடிகர் மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் சிரஞ்சீவி, மோகன் லால், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலரும் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “நமது பிரதமர் அன்புள்ள நரேந்திர மோடி ஜி நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் மற்றும் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில், “நமது பிரதமர் மோடி ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கட்டும்” என வாழ்த்தியுள்ளார்.