Advertisment

இயக்குநர் நெல்சனுக்கு ரஜினி வாழ்த்து

‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், திரைத்துறையில் நுழைவதற்கு முன்னாடி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியிருந்தார். ‘கோலமாவு கோகிலா’ படம் முன்பே சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். ஆனால் இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார். பின்பு ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் மூலம் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்து பெற்றார். இப்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் படம் பண்ண பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

தன் படங்களில் டார்க் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த நெல்சன் இன்று பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருக்கும் நெல்சன் திலீப்குமார் தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்து கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Actor Rajinikanth jailer 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe