rajini wishes mohanlal l2 empuran trailer

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார்.

Advertisment

இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை கூட்டும் வகையில் முதல் பாகத்தை படக்குழு இன்று(20.03.2025) ரீ ரிலீஸ் செய்துள்ளது.

Advertisment

rajini wishes mohanlal l2 empuran trailer

`எல்2; எம்புரான்' பட வெளியீட்டிற்காக ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரித்விராஜ், படத்தின் டிரெய்லரை முதல் நபரக ரஜினி பார்த்துள்ளதாக தெரிவித்து பின்பு அவர் கூறிய வார்த்தைகளை என்றென்றும் மறக்கமாட்டேன் எனத் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து படத்தின் டிரெய்லர் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், “மை டியர் மோகன் மற்றும் பிரித்விராஜ் படத்தின் டிரெய்லரை பார்த்தேன். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள். படம் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment