rajini

Advertisment

பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் 'காலா' படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் மீண்டும் இந்தியா திரும்பியவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளபோவதாகவும் கூறப்படுகிறது.