Skip to main content

சென்னைக்கு 'டாட்டா! பை! பை!' சொன்ன ரஜினி!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

vdsgbsdav

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.

 

hfsdh

 

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக, ரஜினி நேற்று தனி விமானத்தில் ஹைதராபாத் கிளம்பிச் சென்றார். அங்கு முன்பைவிட கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அங்கு, 'அண்ணாத்த' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. 'அண்ணாத்த' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”என் கையைப் பிடிச்ச உடனே ரஜினி கேட்ட அந்தக் கேள்வி” - அண்ணாத்த நினைவுகள் பகிரும் வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

திருமகன்தான் சினிமாவில் எனக்கு அறிமுகப்படம். அதன் பிறகு, சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர் என அடுத்தடுத்து படங்களில் நடித்தேன். அப்படியே சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். நான் வாய்ப்பு கேட்டு யாரிடமும் சென்று நின்றதில்லை. 56 வயதில்தான் சினிமாவுக்குள் வந்தேன். தேனியில் ஒரு கல்யாணத்திற்கு சென்றுவிட்டு வரும்போது, ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போது பட்டுச்சட்டை, பட்டுவேஷ்டி உடுத்தியிருந்தேன்.  இயக்குநர் ரத்னகுமார் சார்தான் என்னை அழைத்து, ஒரு பண்ணையார் கேரக்டர் இருக்கு நடிக்கிறியா எனக் கேட்டார். நானும் சரி என்று நடித்தேன். 

 

எம்.ஜி.ஆர். எனக்கு குலதெய்வம் மாதிரி. அவருடைய படம் என்றால் அந்தக் காலத்தில் தவறாமல் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிடுவேன். அப்படி இருந்த நான் இன்றைக்கு சினிமாவில் நடித்துள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது. சினிமா எனக்கு கொடுத்ததுதான் அதிகம். 

 

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தாய்மாமாவாக நடித்திருந்தேன்.  முதல் நாள், ரஜினி சார் எனக்கு கைகொடுத்த உடனே நீங்க விவசாயியா என்றார். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க என்று கேட்டதற்கு உங்க கையைத் தொட்டாலே தெரியுது என்றார். மிகவும் பெருமையாக இருந்தது. பின், என்னுடைய வயதைக் கேட்டார். 70 சார், உங்க வயதுதான் சார் என்றேன். அவர் கையைக் காண்பித்து, என் கை எப்படி இருக்கு, உங்க கை எப்படி இருக்குனு பாருங்க என்றார். நான் நிலத்துல வெயில்ல உழைக்கிறேன் சார், நீங்க ஏ.சி.யிலயே இருக்கீங்க என்று கூறினேன். ரஜினி சாரோட இணைந்து நடித்ததுல ரொம்ப சந்தோஷம்.   

 

 

Next Story

''மழை இல்லை என்றால் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்''-ரஜினிகாந்த் பேச்சு!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

'' If it had not rained, Annaththa's film would have been a huge success '' - Rajinikanth talk!

 

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் 'அண்ணாத்த'. இத்திரைப்படம்  பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் அண்ணாத்த படம்  வெளியாகி 50வது நாள் ஆனதையொட்டி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு ஒன்றில், 'எதிர் விமர்சனம் இருந்தாலும், மழையை கடந்து அண்ணாத்த படம் வெற்றியடைந்துள்ளது. மழை இல்லை என்றால் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும் எனக் கூறியுள்ள அவர், 'பாட்ஷா'  படத்தின் 'நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் ஆனால் கெட்டவர்களை...' என்ற டயலாக்கை பேசியுள்ளார்.