Advertisment

இந்தியா vs ஆஸ்திரேலியா; மைதானத்தில் கண்டு ரசிக்கும் ரஜினி

rajini watching india vs australia match in mumbai

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத்தொடர்ந்து ஒரு நாள் தொடர் இன்று முதல் ஆரம்பமானது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில் டாஸ் வென்ற இந்தியஅணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியை மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலேவுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

Actor Rajinikanth cricket india vs Australia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe