/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/241_11.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஆகியோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்படத்தை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில் அம்மாநில முதலமைச்சருடன் படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார். அதில் ரஜினியும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)