தென்னிந்திய மொழிகளில் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஏ.வி.எம் ப்ரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தியது.
இந்த நிறுவனம் அவர்களது ஸ்டுடியோவில், ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை உருவாக்கினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் இதனைத்திறந்து வைத்தார். இந்த மியூசியத்தில், உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும் மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் வைத்துள்ளனர்.
இந்த மியூசியத்திற்கு மக்கள் வருகை தந்து பார்த்து ரசித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அண்மையில் ஏ.வி.எம் சரவணனை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.