
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஸ்பேஸ் செக் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பு சார்பில் விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தொலைநோக்கு உருவாக்கும் திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லாடர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை உள்ளிட்ட பல்வேறு வியப்பூட்டும் விஷ்யங்கள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த கண்காட்சி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் கட்டணமின்றி இலவசமாக இதனை கண்டுகளிக்கலாம் என்று பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கண்காட்சியில் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்று, அங்குள்ள இயந்திரங்களை கண்டு களித்தனர். மேலும் அங்குள்ள மாணவ மாணவிகளை வாழ்த்தியதாக கூறப்படுகிறது.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.